PDF பைல்களில் சுலபமாக Water mark போட
PDF பைல்களில் சுலபமாக Water mark போட
நம்முடைய
தகவல் பாதுக்காப்பவும் எடிட் பண்ண முடியாமலும் இருக்க நாம் பைல்களை PDF ஆக
உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்த PDF
பைல்களில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water
Mark ஆக போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.- பயனர்கள் மிகவும் சுலபமாக செயல்படுதும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்சம் 20mb உள்ள பைல் வரை வாட்டர்மார்க் போடலாம்.
- இது முழுக்க முழுக்க இலவச சேவை
- வாட்டர் மார்க் நிறத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
உபயோகிக்கும் முறை:
- கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும் அதில் Choose File என்ற ஒரு விண்டோ வரும் அதில் கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- உங்கள் வாட்டர்மார்க் வர வேண்டிய இடம், வாட்டர்மார்க் நிறம் மற்றும் Transparency தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Watermark Pdf பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்கள் PDF பைலின் மீது வாட்டர் மார்க் இடப்பட்டால் உங்களுக்கு கீழே இருப்பதை போன்ற ஒரு அறிவிப்பு வரும்.
- படத்தில் காட்டி இருப்பது போல வந்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள Click Here என்ற லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கான PDF பைல் தயாராகிவிடும்.
- பிறகு அதில் உள்ள Save பட்டனை அழுத்தி வாட்டர் மார்க் போட்ட PDF பைலை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
- இந்த முறையில் உங்களுக்கு எத்தனை பைல்களில் வாட்டர்மார்க் வேண்டுமோ போட்டு கொள்ளலாம்.
உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing
நம்மை
சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை
வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள
உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய்
இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம்
கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும் இதை
செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர்
தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத
பாடு பட வேண்டும். இதனால் பெருமாலானவர்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை.
ஆனால்
நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன்
மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் இந்த வசதி
இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர். ஆதலால் இந்த வசதியை அனைவரும்
பயன்படுத்தும் விதமாக இங்கு தெரியப்படுத்துகிறேன்.

- இதற்க்கு முதலில் Online Petition Filing இந்த லிங்கில் செல்லுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் வலது பக்க சைட்பாரில் Select என்ற ஒரு சிறிய கட்டம் இருக்கும்.
- அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
- உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நான் திருவள்ளூர் மாவட்டத்தை தேர்வு செய்துள்ளேன்.
- அந்த விண்டோவில் நான் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள ஈமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதை குறித்து கொண்டும் ஈமெயில் அனுப்பலாம்.
- அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம்.
- இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள் அதை குறித்து கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சொதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என அறியலாம்.
- கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அந்த கோரிக்கை எண் வைத்து நீதிமன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம்.
- நண்பர்களே இதில் கொடுக்கும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும் போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.
பேஸ்புக்கை பழைய தோற்றத்திற்கு மாற்ற - Disable Timeline
உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் முதன்மை சமூக தளமான
பேஸ்புக் தளம் வாசகர்களின் ப்ரோபைல் பக்கங்களுக்கு Timeline எனப்படும்
புதிய தோற்றத்தை வெளியிட்டது. இந்த புதிய தோற்றம் சிலருக்கு பிடித்தும்
சிலருக்கு பிடிக்காமலும் உள்ளது. இருந்தாலும் இந்த Timeline தோற்றம்
பிடிக்குதோ இல்லையோ அனைவரும் கட்டாயமாக உபயோகித்தே ஆக வேண்டும் என
வாசகர்களிடத்தில் திணித்தது பேஸ்புக் தளம். 800 மில்லியன் வாசகர்களை கொண்ட
ஒரு தளம் இது போல நடந்து கொண்டது பலபேருக்கு அதிருப்தியை அளித்தது.
இருந்தாலும் வேறு வழி இல்லாமல் இந்த Timeline தோற்றத்தை உபயோகித்து
வருகின்றனர். உங்களுக்கும் இந்த Timeline தோற்றம் பிடிக்கவில்லையா? பழைய
தோற்றத்திற்கு மாற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் கீழே உள்ள வழிமுறையை
பின்பற்றி Timeline தோற்றத்தை டிசப்ளே செய்யுங்கள்.
- முதலில் இந்த Timeline Remove லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலவிகளை பயன்படுத்துபவர்கள் அதற்க்கான லோகோவில் கிளிக் செய்து அந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் இணைத்து கொள்ளுங்கள் (IE, SAFARI உலவி உபயோகிப்பவர்களுக்கான நீட்சி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
- இந்த நீட்சி உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் ஆகிய உடன் பேஸ்புக் ப்ரோபைல் பக்கத்தை ஓபன் செய்து பாருங்கள் TIMELINE தோற்றம் மறைந்து பழைய தோற்றத்தில் வந்திருப்பதை காண்பீர்கள்.
- இனி உங்களுக்கு பிடித்த தோற்றத்தில் பேஸ்புக்கை உபயோகித்து மகிழுங்கள்.
Note: இந்த நீட்சியை Un Install செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் Timeline தோற்றத்தை மீண்டும் கொண்டு வரலாம்.
பிளாக்கில் விதவிதமான டிசைன்கள் விழ வைக்க
நம்முடைய பிளாக்கை அழகாக வைத்து இருப்பது நம்முடைய கடமையாகும். அழகுக்கு அழகு சேர்க்க நம்முடைய பிளாக்கில் சில வித்தியாசமான டிசைன்களை தூவி விடுவோம் வாருங்கள். கிருஸ்துமஸ் நெருங்கி கொண்டு இருப்பதால் சில கிருஸ்துமஸ் டிசைன்களை இங்கு காண்போம்.
<script src="http://vandhemadharam.googlecode.com/files/snow.js" type="text/javascript"></script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-animated-snowflake.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-animated-snowman.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-santa-claus.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-present.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-christmas-three.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-blue-snow.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-santa-cap.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-christmas-candy.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/rosethin.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/rosefull.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-christmas-candy.js" type="text/javascript"> </script>

<script src="http://vandhemadharam.googlecode.com/files/falling-ornament.js" type="text/javascript"> </script>
இதில் மேலே உள்ள டிசைன்களில் உங்களுக்கு பிடித்த டிசைன்களுக்கு கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து
- Design- Add Gadget - Html/Java Script - சென்று உங்களுடைய கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.
- பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள Save பட்டனை அழுத்தி இந்த விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது இந்த விட்ஜட்டை நகர்த்தி பிளாக்கின் மேல்பக்கத்தில் நடுவில் இருப்பது போல் வையுங்கள். அப்பொழுது தான் தான் நாம் டிசைன்கள் விழுவது பதிவின் நடுவில் வரும்.
அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொருள்
இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்று அந்தந செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம். எதெதுக்கோ மென்பொருள் இணைக்கிறோம் நம் குழந்தைகளை குஷிபடுத்த ஒரு மென்பொருள் போட்டால் தான் என்ன.

- கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- மென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
- FLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

- இப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஈக்கள் ஓடுவதை காணமுடியும்.
- உண்மையிலேயே நிஜ ஈக்கள் போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.
- இதில் உங்களுக்கு குறிப்பிட்ட ஈயை நீக்க வேண்டுமென்றால் அந்த ஈயின் மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.
- உங்களுக்கு மேலும் ஈக்களை சேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள ஈயின் மீது வலது க்ளிக் செய்து ஈக்களை சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம்.
- இதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க.
செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்
கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

- முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
- ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
- குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
- உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
- காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
- தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
- நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
- செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
- செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
- செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
- செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
- போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.














