Posted by : ஆனந்த் சதாசிவம் Thursday, April 19, 2012

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். இதனால் பெருமாலானவர்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை.


ஆனால் நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது.  ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர். ஆதலால் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தும் விதமாக இங்கு தெரியப்படுத்துகிறேன்.

  • இதற்க்கு முதலில் Online Petition Filing இந்த லிங்கில் செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் வலது பக்க சைட்பாரில் Select என்ற ஒரு சிறிய கட்டம் இருக்கும்.
  • அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
  • உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நான் திருவள்ளூர் மாவட்டத்தை தேர்வு செய்துள்ளேன்.
  • அந்த விண்டோவில் நான் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள ஈமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். 
  • அதை குறித்து கொண்டும் ஈமெயில் அனுப்பலாம்.
  • அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம். 
  • இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள் அதை குறித்து கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சொதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என அறியலாம்.
  • கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அந்த கோரிக்கை எண் வைத்து நீதிமன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம். 
  • நண்பர்களே இதில் கொடுக்கும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும் போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blogger templates

Labels

Blog Archive

- Copyright © Technologies -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -