Archive for May 2013

விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்

கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் சரியாக மென்பொருள்களை நிறுவி பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலும் ஒன்றுக்கும் அதிகமான வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், மற்றும் உலாவிகளை நிறுவி இருப்பார்கள் தவிர அவசியமான இன்னும் பிற மென்பொருள்களும் கணினிக்கு கட்டாயம் தேவை.

விண்டோஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவி விடுவோம். பின் ஆண்டிவைரஸ் நிறுவுவோம். பின் தேவையான ட்ரைவர் நிறுவுவோம். இன்னும் ஒருசில மென்பொருள்களை நிறுவிவிட்டு அப்படியே விட்டுவிடுவோம்.  ஒரு இரண்டு மாதங்களுக்கு பிறகு கணினியானது மந்தமாக செயல்படும் இதற்கு காரணம். அவ்வப்போது தற்காலிகமாக தங்கும் கோப்புகளை நீக்கம் செய்யாதது. முறையாக மென்பொருள் நிறுவாமை போன்ற பல காரணங்கள் ஆகும்.

விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்தவரை கட்டாயமாக 25 மென்பொருள்கள் இருத்தல் அவசியம் ஆகும். அவை எவையென்று பார்ப்போம்.

1.சிறந்த ஆண்டிவைரஸ்


விண்டோஸ் இயங்குதளத்தில் கட்டாயம் ஆண்டிவைரஸ் மென்பொருள் தேவை, ஆண்டிவைரஸ் இல்லையெனில் வைரஸ் நம் கணினியில் புகுந்து அனைத்து கோப்புகளையும் நாசம் செய்து விடும். இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் நம்முடைய கோப்புகள் அனைத்தும் திருடப்பட்டுவிடும். எனவே கண்டிபாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருப்பது அவசியம் ஆகும்.

மைரோசாப்ட் நிறுவனமே வைரஸ்களை எதிர்க்க மற்றும் அழிப்பதற்கு ஆண்வைரஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர் Microsoft Security Essentials. கீழே குறிப்பிட்டுள்ள சுட்டியில் ஏதாவது ஒன்றை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். இவை யாவும் இலவசமாக கிடைக்க கூடிய மென்பொருள்கள் ஆகும். இன்னும் சில மென்பொருள்கள் சந்தையில் பணம் கொடுத்து வாங்கியும் பயன்படுத்தலாம்.

 ஆண்டிவைரஸ் மென்பொருளகளை தரவிறக்கம் செய்ய சுட்டிகள்


2.ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்கள்



ஆடியோ மற்றும் வீடியோக்களை கணியில் இயக்க ஏதாவது ஒரு பிளேயர் கண்டிப்பாக இருத்தல் அவசியம் ஆகும். இதில் மிகவும் பிரபலமானது VLC பிளேயர் ஆகும். இந்த VLC பிளேயர் ஒரு ஒப்பன்சோர்ஸ் மென்பொருள் ஆகும்.

தரவிறக்க சுட்டிகள்


3.ரிஸிஸ்டரி கிளினர்
விண்டோஸ் இயங்குதளத்தில் தற்காலிகமாக தேங்கியுள்ள கோப்புகளை நீக்கவும். ரிஸிஸ்டரி பிழைகளை நீக்கவும் மற்றும் கணினியில் வேகத்தை அதிகபடுத்தவும் இதுபோன்ற ரிஸிஸ்டரி கிளினர் மென்பொருள்கள் பயன்படுகின்றன.

தரவிறக்க சுட்டிகள் 

4.சீடி/டிவிடி மென்பொருள்கள் 


சிடி மற்றும் டிவிடியில் தகவல்கள்களை பதிவேற்றம் செய்ய அதிகமான கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தபடுகிறது. இமேஜ் பைல்களை பூட்டபிள் பைல்களாகவும். ஆடியோ மற்றும் வீடியோக்களை சிடி/டிவிடியில் பதிவேற்றம் செய்யவும் இது போன்ற பர்னிங் மென்பொருள்கள் பயன்படுகிறது.

தரவிறக்க சுட்டி

 5.உலாவிகள்
இணைய பக்கங்களை வலம் வர பயன்படுத்தபடுவது உலாவிகள் ஆகும். இதில் மிகவும் சிறப்பானது நெருப்புநரி மற்றும் கூகுள் குரோம் உலாவிகள் ஆகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இருப்பியல்பாக இருக்கும்.

தரவிறக்க சுட்டிகள்

 6.ஆப்பிஸ் தொகுப்புகள்

ஆப்பிஸ் தொகுப்பில் மிகவும் பிரபலமானது மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பாகும்.  இதனை விலைக்கொடுத்து வாங்க வேண்டும். இன்னும் இதைவிட சிறப்பான ஒப்பன் சோர்ஸ் ஆப்பிஸ் தொகுப்புகள் இலவசமாக கிடைக்கிறன. அதில் சிறப்பானது ஒப்பன் ஆப்பிஸ் தொகுப்பாகும்.

தரவிறக்க சுட்டிகள்

7.பிடிஎப் ரீடர்

பிடிஎப் பைல்களை கையாள கண்டிப்பாக பிடிஎப் ரீடர்கள் அவசியம், இதில் மிகவும் பிரபலமானது அடோப் பிடிஎப் ரீடர் ஆகும்.  இதை தவிர இன்னும் சில சிறப்பான பிடிஎப் ரீடர்களும் உள்ளது அதில் குறிப்பிடதக்கது Foxit Reader ஆகும்.

தரவிறக்க சுட்டிகள்


8.7-ஜிப்

கோப்புகளை சுருக்கி விரிப்பதற்கு பயன்படும் மென்பொருள் ஆகும். 7 ஜிப் மென்பொருளானது ஒப்பன் சோர்ஸ் ஆகும். 

7-ஜிப் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி  
வின்ரேர் தரவிறக்க சுட்டி

9.டவுண்லோட் மேனேஜர்கள் 



இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் போது பதிவிறக்கம் வேகமாக நடைபெறவும். முழுமையாக பதிவிறக்கம் செய்யவும் இந்த இணைய பதிவிறக்க மென்பொருள் பயன்படுகிறது.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி

 10.டோரன்ட் 

டோரண்ட் பைல்களை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் ஆகும். Utorrent, Bittorrent மென்பொருள்கள் இதில் சிறப்பானவைகள் ஆகும்.

யூடோரன்ட் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி

11.அடோப் போட்டோசாப் / கிம்ப்
போட்டோக்களை எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருள் போட்டோசாப் ஆகும். இது இலவசமாக கிடைக்காது இதற்கு மாற்று மென்பொருள் கிம்ப் ஆகும். இது ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி

12.ஆடியோ / வீடியோ எடிட்டிங் மென்பொருள்


ஆடியோ மற்றும் வீடியோக்களை எடிட் செய்ய உதவும் சிறந்த மென்பொருள் Media Cope ஆகும். இந்த மென்பொருள் உதவியுடன் ஆடியோ வீடியோ சம்பந்தமான அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.

தரவிறக்க சுட்டிகள்


13.அடோப் ப்ளாஷ் பிளேயர்

இணையத்தில் உள்ள வீடியோக்களை காண இந்த அடோப் ப்ளாஷ் பிளேயர் பயன்படுகிறது. யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவை காண வேண்டுமெனில் கண்டிப்பாக அடோப் ப்ளாஷ் பிளேயர் கண்டிப்பாக தேவைப்படும்.

ப்ளாஷ் பிளேயரை தரவிறக்கம் செய்ய சுட்டி

14.மால்வேர் பைட்ஸ்


மால்வேர்களை நீக்க பயன்படும் மென்பொருள் ஆகும். கணினியின் வேகத்தை அதிகபடுத்தவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

15.பயர்வால் 

கணினியை மால்வேர்களிடம் இருந்து காப்பதற்கு பயன்படும் மென்பொருள் பயர்வால் ஆகும். தேவையற்ற அப்ளிகேஷன்களையும்/வலைமனைகளை  தடுக்கவும் பயர்வால் உதவும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி

16.டீம் வியூவர் 



இணைய உதவியுடன் டெஸ்க்டாப்பினை பகிர்ந்து கொள்ள உதவும் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 

17.நோட்பேட்++
`நிரலாக்க மொழிகளை சிறப்பாக கையாளுவதற்கு உதவும் மென்பொருள் Notepad++ ஆகும். இந்த மென்பொருளை கொண்டு நிரலாக்க மொழிகளை கையாளும் போது பிழைகளை எளிதில் கண்டறிந்து நீக்க முடியும்.

தரவிறக்க சுட்டி

18.போல்டர் லாக்




சுய விவரங்களையும் பூட்டி வைக்க உதவும் மென்பொருள் ஆகும். கண்டிப்பாக அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள்.

தரவிறக்க சுட்டி

19.சேன்ட்பாக்ஸி


இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் மென்பொருள்களில் வைரஸ் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உதவும் மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 

20.தமிழ் எழுத்துரு மென்பொருள்  



தமிழிலில் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள் ஆகும். தமிழில் லதா பான்ட் கொண்டு தட்டச்சாகும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், அசாம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாப்பி , குஜராத்தி, பெங்காளி, ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளையும் இந்த மென்பொருள் கொண்டு தட்டச்சு செய்யலாம். அளவில் மிகச்சிறிய மென்பொருள்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

21.பைல் ஒப்பனர்


அனைத்து விதமான பைல்களையும் ஒப்பன் செய்ய உதவும் மென்பொருள், இலவச மென்பொருள். 80+ அதிகமான பைல் பார்மெட்களை ஆதரிக்கிறது இந்த மென்பொருள்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

22.விஎம்வேர் வோர்க்ஸ்டேஷன்


இந்த மென்பொருளில் உதவியுடன் கணினியின் உள்ளே இயங்குதளங்களை நிறுவ முடியும். புதியதாக இயங்குதளங்களை நிறுவ கற்றுகொள்ளும் போது இந்த மென்பொருள் உதவியுடன் எளிதாக நிறுவி கற்றும் கொள்ள முடியும்.

மேலும் விஎம்வேர் பற்றி அறிய சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

23.டீப் ப்ரீசர்


அனைத்து மென்பொருள்களையும் நிறுவிவிட்டு பின் இறுதியாக இந்த மென்பொருளை நிறுவவும். இந்த மென்பொருளை நிறுவும் போது நாம் எந்த கோலனை குறிப்பிடுகிறோமோ அதில் சேமிக்கும் தகவலோ நிறுவும் அப்ளிகேஷன்களோ கணினியை மறுதொடக்கம் செய்யும் போது தானாகவே அழிந்துவிடும். 

மென்பொருள்களை தரவிறக்க சுட்டி

24.ஸ்லிம் ட்ரைவர்


ட்ரைவர்களை இணைய உதவியுடன் இன்ஸ்டால் செய்யவும், அப்டேட் செய்து கொள்ளவும் இந்த மென்பொருள் உதவும்.

தரவிறக்க சுட்டி

25.சைபர்லிங் யூகேம்


வெப்கேமிரா மூலம் படம் மற்றும் வீடியோ எடுக்க உதவும் மென்பொருள் ஆகும்.

தரவிறக்க சுட்டி

மேலே குறிப்பிட்டுள்ள மென்பொருள்  தொகுப்பில்  ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் குறிப்பிட்டுள்ளேன். அதில் ஏதேனும் ஒன்றை மட்டும் தெரிவு செய்து கொள்ளவும்.
Tuesday, May 28, 2013
Posted by ஆனந்த் சதாசிவம்
Tag :

How to Make a USB Bootable


  1. How to Make a USB Bootable

    1) Attach the USB Flash Drive to a Windows Vista/7 
    2) As Administrator: Open a command window and run 'DISKPART’
    3) At the DISKPART> prompt, type 'List disk' 
    4) Determine which disk number corresponds to the USB flash drive (make sure you correctly make this determination!), then at the DISKPART> prompt, type 'Select 
    disk <x>' where <x> is the disk number that the USB flash drive corresponds to 
    5) At the DISKPART> prompt, type 'Clean'
    WARNING!: This will wipe all the contents from the drive you selected in step 4 so make sure that the correct drive is selected and that there is nothing on the drive that is needed.
    6) At the DISKPART> prompt, type 'List Partition'. If there are no partitions, 
    move on to step 7. If there is a partition, at the DISKPART> prompt, type 'Select 
    Partition 1' then type 'Clean' 
    7) At the DISKPART> prompt, type 'Create Partition Primary'. If you receive an 
    error at this stage regarding not being able to create a partition, the USB Flash 
    Drive is not capable of being made bootable and will not work as an SCCM 2007 
    bootable Task Sequence Media. Please restart the process using a different USB
    Flash Drive. 
    8) At the DISKPART> prompt, type 'Select Partition 1' 
    9) At the DISKPART> prompt, type 'Format FS=FAT32 QUICK' 
    10) At the DISKPART> prompt, type 'Active' 
    11) At the DISKPART> prompt, type 'Assign' 
    12) At the DISKPART> prompt, type 'Exit'

Posted by ஆனந்த் சதாசிவம்
Tag :

Popular Post

Blogger templates

Labels

- Copyright © Technologies -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -