Archive for May 2012

சூப்பர் கம்ப்யூட்டர்

ஜெர்மனி சாதனை
ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது.

பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும்.

அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும்.

இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஆனால் இதற்கும் தாத்தா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறது. அதன் செயல்திறன் விநாடிக்கு 367 டெராஃபிளாப்.

Tuesday, May 29, 2012
Posted by ஆனந்த் சதாசிவம்
Tag :

உங்கள் போட்டோக்களை DVD ஆல்பமாக தயாரிக்க

வீட்டு விசேஷங்களிலும், சுற்றுலா செல்லும் போதும் நாம் படம் எடுத்து கொள்வது வாடிக்கையாகி விட்டது. போட்டோக்கள் எடுத்து கொள்வதன் மூலம் நாம் அந்த பழைய நினைவுகளை மறக்காமல் இருப்பதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. நாம் சிறுவயது போட்டோக்கள் நம் பள்ளிவயது கல்லூரியில் எடுத்தது இப்படி பல போட்டோக்கள் நம்மிடம் இருக்கும். 

இவை அனைத்தையும் நாம் ஒன்று சேர்த்து DVD ஆல்பமாக தயாரித்தால் பார்ப்பதற்கே அழகாக இருக்குமல்லவா. அதை சுலபமாக செய்யவே நமக்கு ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் நீங்கள் உபயோக நிலையில் உள்ள ஏதேனும் ஈமெயில் ஐடி கொடுத்து அருகில் உள்ள Download பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

  • ஏதேனும் அப்டேட் வெர்சன் வந்தால் தெரிவிக்கவே இந்த ஈமெயில் ஐடியை கேட்கின்றனர்.
  • உங்கள் பைலை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து முடித்ததும் மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • நீங்கள் DVD யாக மாற்ற விரும்பும் போட்டோக்களை ஒன்றாக ஒரு போல்டரில் போட்டு டெஸ்க்டாப்பில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். 
  • இதில் மேல் பகுதியில் உங்கள் போட்டோக்கள் உள்ள போல்டரை தேர்வு செய்தவுடன் கீழே அந்த படங்கள் வரிசையாக வந்து விடும் இதில் ரைட் க்ளிக் செய்து Add all என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • உங்கள் போட்டோக்கள் பக்கத்தில் மேலே உள்ள காலி கட்டத்தில் வரிசையாக வந்திருக்கும்.
  • இதில் ஏதாவது படம் தலைகீழாக இருந்தால் அதை நேராக திருப்பி கொள்ளுங்கள் 
  • அடுத்து நீங்கள் அருகில் உள்ள AUDIOS என்பதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து Audios என்பதை தேர்வு செய்து போட்டோக்களை தேர்வு செய்த முறையில் ஆடியோவையும் தேர்வு செய்து கொள்ளவும். 
  • அடுத்து உங்கள் விண்டோவில் கீழே பார்க்கவும். 
  • கீழே உற்று நோக்கினால் உங்கள் போட்டோக்கள் வரும் நேரமும் ஆடியோ பாடும் நேரமும் தெரியும் இவை இரண்டும் முன்னுக்கு பின் முரணாக இருந்தால் மேலே உள்ள LOOP என்ற பட்டனை க்ளிக் செய்து கொள்ளவும். இது இரண்டையும் சரி செய்து கொள்ளும்.
  • மேலே படத்தில் கூறியுள்ளதை போல வரிசையாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து முடிவில் Output என்ற கடைசி படியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • இதில் உங்கள் DVD ஆல்பம் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொண்டு Output என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் DVD ஆல்பம் தயாராக ஆரம்பிக்கும்.
  • பொறுமையாக இருக்கவும் உங்கள் போட்டோக்களின் எண்ணிக்கையை பொறுத்து நேரம் பிடிக்கும்.
  • முடிவில் உங்களுக்கு Congratulations your DVD Album ready என்ற செய்தி வரும் வரை பொறுமையாக இருக்கவும்.
Saturday, May 19, 2012
Posted by ஆனந்த் சதாசிவம்
Tag :

பீட்பர்னர் உதவியுடன் பிளாக்கர் பதிவுகளை ட்விட்டரில் Auto Publish செய்ய


பிளாக்கர் வலைப்பூக்களில் கவிதை,கட்டுரை, அரசியல், திரை விமர்சனம் இப்படி அவரவர் விருப்பப்படி பதிவு எழுதி கொண்டிருக்கிறோம். பல எழுத்தாளர்களை வெளி கொண்டுவந்த இந்த பிளாக்கர் தளத்திற்கு நன்றி. ஒவ்வொரு பதிவரும் விரும்புவது அவர்களின் பதிவுகள் பெரும்பாலனவர்களை சென்றடைய வேண்டுமென்பதே. ஆதலால் நம் பதிவுகளை திரட்டிகளிலும், சமூக தளங்களிலும் இணைக்கிறோம். இந்த சமூக தளங்களில் பிரபலமான தளமான ட்விட்டர் தளத்திலும் நம் பதிவுகளை இணைக்கிறோம். பதிவு போட்டு ஒவ்வொரு முறையும் இதில் இணைக்க வேண்டியதாக உள்ளது. இதை மாற்றி நாம் பதிவு போட்டவுடன் ட்விட்டரில் தானாகவே அப்டேட் ஆகும் படி செய்வது என பார்ப்போம்.
இதற்க்கு பல தளங்கள் இருந்தாலும் கூகுளின் தளமான பீட்பர்னரின் உதவியுடன் எப்படி ஆட்டோ பப்ளிஷ் செய்வது என பார்ப்போம்.

  • முதலில் உங்கள் பீட்பர்னர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். அங்கு உள்ள உங்களின் Feed Id மீது கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். 
  • அடுத்து Publicize ==> Socialize என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • இப்பொழுது உங்களுக்கு இன்னொரு பகுதி ஓபன் ஆகும் அதில் உள்ள Add a Twitter Accountஎன்பதை கிளிக் செய்து உங்கள் ட்விட்டர் கணக்கின் User Name கொடுக்கவும்.
  • கீழே படத்தில் உள்ளதை போல அனைத்தையும் மாற்றம் செய்யுங்கள். 
  • படத்தில் உள்ளது போல சரியாக செய்தவுடன் கீழே உங்கள் tweet Preview காட்டப்படும். 
  • அடுத்து கீழே உள்ள Activate என்பதை கிளிக் செய்யுங்கள். 
  • Activate என்பதை கிளிக் செய்தவுடன் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும். 
இனி உங்களின் பதிவுகள் தானாக பிளாக்கரில் அப்டேட் ஆகிவிடும்.
Tuesday, May 8, 2012
Posted by ஆனந்த் சதாசிவம்
Tag :

ஏர்டெல் வழங்கும் இலவச Missed Call Alert சேவை ஆக்டிவேட் செய்ய



பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்ற நிறுவனங்களோடு உள்ள போட்டியை சமாளிக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் ஏதாவது வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி கொண்டே இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் ஆன்லைன் வசதிகளை அளித்தது இப்பொழுது வாசகர்களுக்கு இலவசமாக Missed Call Alert(MCA) வசதியை வழங்குகிறது.

MCA என்றால் என்ன:
உங்கள் மொபைல் Switch Off செய்யப்பட்டு இருக்கும் பொழுதும், சிக்னல் கிடைக்காத சமயத்திலும் யாரவது உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தால் எந்த நம்பரில் இருந்து எத்தனை மணிக்கு தொடர்பு கொண்டார்கள் என்ற விவரம் உங்களுக்கு SMS ஆக வரும்.

இலவச சலுகையை பெற:
இந்த வசதியை இலவசமாக பெற உங்கள் ஏர்டெல் மொபைலில் கீழே உள்ள ஏதாவது ஒரு எண்ணை அழையுங்கள்.

*321*880#
*321*881#
*321*882#
*321*884#
*321*885#

உங்கள் மொபைலில் கீழே இருப்பதை போல செய்தி வந்திருக்கும் வரவில்லை எனில் வேறு எண்ணை அழையுங்கள்.

Reply with 1 to subscribe MCA @ Rs.0 for 30 days and never miss your calls


இப்பொழுது Reply அழுத்தி 1 கொடுத்து SMS அனுப்பினால் இலவசமாக MCA வசதி ஆக்டிவேட் ஆகிவிடும்.

இந்த வசதி வேண்டாம் என்றால் *321*883# கொடுத்து இந்த வசதியை செயலிழக்க செய்து விடுங்கள்.

இந்த தகவல் பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Posted by ஆனந்த் சதாசிவம்
Tag :

இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்


இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது

இது போன்று அவஸ்தை பட்டவர்களில் நீங்களும் ஒருவரா அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி இனி இந்திய ரயில்களில் வருகிறது வை-பை இன்டர்நெட். கடந்த சில வருடங்களாக அனுமதிக்காக காத்து கொண்டிருந்த இந்திய ரயில்வேக்கு இஸ்ரோவிடம்(ISRO) இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. இஸ்ரோ Ku-band என்ற அலைவரிசையின் மூலம் இந்த வசதியை வழங்க இருக்கிறது. இந்திய ரயில்களில் செயற்கை கோளில் இருந்து சிக்னலை பெரும் வகையில் ஒரு ஆன்டனாவை பொருத்தி விடுவார்கள் அதன் மூலம் நாம் அதிவேக இணையத்தை ரயிலில் பயணித்து கொண்டே உபயோகிக்கலாம்.

ரூபாய் 6.30 கோடியில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு பைலட் ப்ராஜக்ட் (Pilot Project) என பெயரிட்டு உள்ளனர். இதை முதன் முதலில் ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் பொழுது நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வசதிக்காக டிக்கெட் பரிசோதகரை அணுகினால் அவர் ஒரு மொபைல் என்னை தங்களுக்கு வழங்குவார். உங்களின் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு ஒரு டயல் செய்தால் வை-பை ஆக்டிவேட் செய்வதற்கான கடவுச்சொல்லை அனுப்புவார்கள். அதன் மூலம் உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இருந்து இலவசமாக இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை. ஆக நீங்கள் பைலட் ப்ராஜெக்ட் நேரத்தில் ராஜ்தானி ரெயிலில் பயணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்ட சாதனத்தை கொண்டு போக மறக்க வேண்டாம். 
Posted by ஆனந்த் சதாசிவம்
Tag :

Popular Post

Blogger templates

Labels

- Copyright © Technologies -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -