Posted by : ஆனந்த் சதாசிவம் Sunday, July 7, 2013



இன்றைய சமூக வலைதளங்களில் பேஸ்புக் இணையதளம் நூறு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் வளைதளமாக பேஸ்புக் மாறியுள்ளது.

மக்கள் அனைவரையும் கவர்ந்த பேஸ்புக் எப்படி உருவானது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா...வாருங்கள் பார்ப்போம்.


ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவன் மார்க் ஸுக்கர்பெர்ப் (Mark Zuckerberg) என்பவர் விளையாட்டாக உருவாக்கப்பட்டது தான் இந்த பேஸ்புக் வலைதளம்.

இந்த பல்கலைக்கழகத்துக்கு ஒரு பழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் ஆசிரியர்கள் உள்ள தகவல்கள் நிறைந்த புத்தகத்தை பல்கலையில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தருவது வழக்கம். அந்த புத்தகத்தை மாணவர்கள் பேஸ்புக் என்று அழைப்பார்கள்.

மார்க் தன்னை கைவிட்டு போன காதலியின் நினைவாக, ஆழ்ந்த சிந்தனையில் இருக்கு போது விளையாட்டாக வலைதளத்தை கண்டறிந்தார். சக மாணவர்களான எட்வர்டோ சவேரின், ஆன்ரிவ், டஸ்டின் மோஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹயூக்ஸ் ஆகியோர் உறுப்பினராக சேர்த்துக் கொண்ட இணையதளம் ஒன்றை உருவாக்கினார்.

அதன் பின்னர் கல்லூரி மாணவர்களும் இணையதளத்தில் சேர்ந்தனர். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 13 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களும் இந்த வலைதளத்தில் சேர அனுமதிக்கப்பட்டனர்.

விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது உலக அளவில் மக்கள் விரும்பும் இணையதளமாக மாறியுள்ளது. இதனை உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலீடு செய்கிறது. தற்போது இது இலாபம் ஈட்டும் இணையதளமாக மாறியுள்ளது.

இந்த வலைதளத்தை ஏன் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். மனித உறவுகள் பலவீனமடைந்து வரும் இக்காலக்கட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அங்கும், இங்குமாக சிதைந்து கிடக்கின்றனர். ஆதாயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளும் மக்கள் அன்பை பகிர்ந்து கொள்ளவதில்லை. உறவின் முக்கியத்துவத்தையும், அன்பையும் பரிமாறிகொள்ளும் விதத்தில் மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரதசாதம் தான் இந்த பேஸ்புக் இணையதளம்.

நமக்கு தோன்றும் உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல், அரட்டை, புகைப்படம் என அனைத்தும் விரும்பியவர்களுடன் பரிமாறிக் கொள்ளும் விதமாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள இணையதளமாகு

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blogger templates

Labels

- Copyright © Technologies -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -