- Back to Home »
- Computer »
- வர்த்த விளம்பரங்களைத் தாங்கி வரும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை எவ்வாறு தடை நிறுத்துவது?
Posted by : ஆனந்த் சதாசிவம்
Thursday, September 27, 2012
மொபைல் வைத்திருப்போரின் தற்போதைய முக்கிய பிரச்சினை என்னவென்றால் அது வர்த்தக விளம்பரங்களைத் தாங்கி வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகும். ஒரு முக்கியமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இத்தகைய அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மக்களின் கவனங்களை சிதறடித்துவிடும். ஆகவே இப்படிப்பட்ட விளம்பர எஸ்எஸ்எம்எஸ்கள் மற்றும் தேவையற்ற கால்களை எவ்வாறு நிறுத்துவது என்று கீழே பார்க்கலாம்.
குறிப்பாக ஏர்டெல் மற்றும் வோடோபோன் வாடிக்கையாளர்கள் ஸ்டார்ட் டிஎன்டி என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் விளம்பர அழைப்புகள் வராது.
அல்லது இந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல் மற்றும் வோடோபோனின் டூ நாட் டிஸ்டர்ப் பேஜிக்கு சென்று இந்த எஸ்எம்எஸ்கள் மற்றும் அழைப்புகளை நிறுத்த முடியும்.
பிபிஎல் மொபைலை வைத்திருப்போர் டூ நாட் கால் சைன் அப் பேஜில் சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் இந்த தேவையில்லாத அழைப்புகள் நின்றுவிடும். அதுபோல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் டூ நாட் கால் என்ற பகுதிக்கு சென்று ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
ஐடியா செல்லுலர் பயன்படுத்தும் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் கால்கள் தேவையில்லை என்று ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பிரிபெய்ட் வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணை பதிவு செய்து தேவையில்லாத அழைப்புகளை நிறுத்த விண்ணப்பிக்க வேண்டும்.
அதுபோல் ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வமான இணைய தளத்திற்குள் சென்று அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை நிறுத்த வேண்டும் என்று விண்ணப்பித்தால் அவை தானாகவே நின்றுவிடும்.