Posted by : ஆனந்த் சதாசிவம் Thursday, April 12, 2012


ஜிமெயிலில் ஈமெயில்களை Schedule செய்து அனுப்பவது எப்படி என பார்க்க போகிறோம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டி இருக்கும்.  உதாரணமாக இரவு 12 மணிக்கு என வைத்து கொள்வோம். இதனால் நீங்கள் இரவு 12 மணிவரை கண்விழித்து ஈமெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய ஈமெயிலுக்கு இரவு 12 மணிக்கு Schedule செய்து விட்டால் போதும் உங்களுடைய ஈமெயில் சரியாக நீங்கள் தேர்வு செய்த நேரத்திற்கு மற்றவர்களுக்கு சென்று விடும். ஞாபக மறதி அதிகமாக இருப்பவர்களுக்கு இது பெரிதும் பயன்படும். ஞாபகம் வரும் பொழுது ஈமெயிலை டைப் செய்து Schedule செய்து விடலாம். குறிப்பாக வாழ்த்து செய்திகள் அனுப்ப பெரிதும் பயன்படும்.


ஜிமெயிலில் Schedule வசதியை கொண்டு வர:
  • முதலில் இந்த Right Inbox தளத்திற்கு செல்லுங்கள் உங்களுடைய இணைய பிரவுசர் (Firefox3.6+ Chrome 5.0+) லேட்டஸ்ட் வேர்சனாக இருப்பது நல்லது. இல்லாதவர்கள் இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • Right Inbox தளத்தில் உள்ள Install Now என்ற பட்டனை அழுத்தி இந்த நீட்சியை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் கொள்ளுங்கள். 
  • இப்பொழுது ஜிமெயிலை ஓபன் செய்யுங்கள். ஏற்க்கனவே ஓபன் செய்து இருந்தால் Refresh செய்யவும்.
  • அடுத்து கீழே உள்ள படங்களில் உள்ளது போல் தொடருங்கள்.
  • அவ்வளவு தான் உங்களுடைய ஜிமெயிலில் இந்த Schedule வசதி ஆக்டிவேட் ஆகி விடும்.
Schedule வசதியை உபயோகிப்பது எப்படி:
  • எப்பொழுதும் மெயில் அனுப்பவது போல Compose பட்டனை அழுத்தி உங்கள் செய்தி, மற்றும் அனுப்புனர் விவரங்களை கொடுத்த பின்னர் Send பட்டனுக்கு பக்கத்தில் Send Later என்ற புதிய பட்டன இருப்பதை காண்பீர்கள் அதனை கிளிக் செய்யவும்.
  • அதில் உங்கள் ஈமெயில் அனுப்ப குறிப்பிட்ட சில நேரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து கொள்ளுங்கள். 
  • அல்லது உங்களுக்கு தேவையான நேரம் அந்த பட்டியலில் இல்லை என்றால் கடைசியில் உள்ள at a Specific Time என்பதை கிளிக் செய்து உங்கள் ஈமெயில் செல்ல வேண்டிய நேரம் மற்றும் தேதியை தேர்வு செய்து கொள்ளவும்.
  • சரியாக நேரம் set செய்தவுடன் கீழே உள்ள Schedule பட்டனை கிளிக் செய்து விட்டால் போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களுடையை ஈமெயில் அவர்களுக்கு சென்று விடும். 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blogger templates

Labels

Blog Archive

- Copyright © 2025 Technologies -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -