Posted by : ஆனந்த் சதாசிவம் Friday, April 13, 2012


இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்று அந்தந செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம். எதெதுக்கோ மென்பொருள் இணைக்கிறோம் நம் குழந்தைகளை குஷிபடுத்த ஒரு மென்பொருள் போட்டால் தான் என்ன.

  • கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • மென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
  • FLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • இப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஈக்கள் ஓடுவதை காணமுடியும்.
  • உண்மையிலேயே நிஜ ஈக்கள் போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.
  • இதில் உங்களுக்கு குறிப்பிட்ட ஈயை நீக்க வேண்டுமென்றால் அந்த ஈயின் மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.
  • உங்களுக்கு மேலும் ஈக்களை சேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள ஈயின் மீது வலது க்ளிக் செய்து ஈக்களை சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம். 
  • இதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க. 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blogger templates

Labels

Blog Archive

- Copyright © 2025 Technologies -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -