Posted by : ஆனந்த் சதாசிவம் Tuesday, May 29, 2012

ஜெர்மனி சாதனை
ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது.

பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும்.

அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும்.

இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஆனால் இதற்கும் தாத்தா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறது. அதன் செயல்திறன் விநாடிக்கு 367 டெராஃபிளாப்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blogger templates

Labels

- Copyright © 2025 Technologies -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -